மாணவர்களுக்கு

 

சுற்றுலா மேனேஜ்மெண்ட்



சுற்றுலா மேனேஜ்மெண்ட் தொடர்பான படிப்புகளை வழங்குவதில் நாட்டில் உள்ள முக்கியக் கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட் (IITTM). கல்வி நிறுவனத்திற்கு குவாலியர், புவனேஸ்வரம், கோவா, புதுதில்லி, நெல்லூர் ஆகிய இடங்களில் வளாகங்கள் உள்ளன. டூரிஸம் அண்ட் டிராவல், டூரிஸம் அண்ட் லெஷர், சர்வீசஸ், இன்டர்நேஷனல் பிசினஸ் (இன்டர்நேஷனல் டூரிஸம்), இன்டர்நேஷனல் பிசினஸ் (டூரிஸம் அண்ட் லாஜிஸ்டிக்ஸ்), டூரிஸம் அண்ட் கார்கோ மேனேஜ்மெண்ட் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ படிக்கலாம்.


இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பட்டப் படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பட்டப்படிப்பில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பட்டப் படிப்புகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இந்தப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.


கேட், மேட், சிமேட், எக்ஸ்ஏடி, ஜிமேட், ஏடிஎம்ஏ ஆகிய தேர்வுகளில் ஏதாவது ஒரு தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட் நடத்தும் டூரிஸம் ஆப்டிட்யூட் டெஸ்ட் (TAT) நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்தத் தேர்வு குவாலியர், நெல்லூர், நொய்டா, புவனேஸ்வரம், கோவா ஆகிய இடங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி நடைபெறுகிறது. சுற்றுலாத் துறையில் மாணவர்களின் அறிவைச்
சோதனை செய்யும் வகையில் இந்த தேர்வு இருக்கும். வரலாறு, கலாசாரம், புவியியல், சுற்றுலா, சமூக சூழல் குறித்த பொதுப் புரிதல் குறித்து இத்தேர்வில் கேள்விகள் இருக்கும். இரண்டு மணி நேரம் நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கு 70 சதவீத மதிப்பெண்களும் குரூப் டிஸ்கஷன் மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தலா 15 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும்.


இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளாலம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் Director, IITTM என்ற பெயரில் ஆயிரம் ரூபாய்க்கான டிமாண்ட் டிராப்ட் எடுத்து இணைத்து அனுப்ப வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ரூ.500 செலுத்தினால் போதும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி விவரம் தெரிவிக்கப்படவில்லை.


விவரங்களுக்கு: www.iittm.org


தொலைபேசி எண்கள்: 07512437300, 07512345823; 09425407607, 07205146285, 09039051004, 08871801017


- நன்றி புதியதலைமுறை

- நி. அல் அமீன்

TNTJ மாணவர் அணி





இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் உதவி அதிகாரிகள் மற்றும் உதவிப் பொறியாளர் பணியில் சேர விரும்பும் ன்ஜியரிங் படித்த மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட கேட் தேர்வை எழுதியிருக்க வேண்டியதும் அவசியம்


இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தில் உதவி அதிகாரிகள் மற்றும் உதவிப் பொறியாளர்கள் பணிகள் புதிதாக உருவாக்கப்பட்

டுள்ளன. இந்தப் பணியில் சேர தகுதியுடையவர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சேரத் தேர்வு செய்யப்படுபவர்களுக்குத் தொடக்க நிலையில் அடிப்படை ஊதியம் ரூ.20,600. அத்துடன் டிஏ, எச்ஆர்ஏ மற்றும் இதர அலவன்ஸ்களும் உண்டு. மொத்தத்தில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் அளவுக்கு ஊதியம் கிடைக்கும்.

சிவில் என்ஜினீயரிங் (கன்ஸ்ட்ரக்‌ஷன், என்விரான்மெண்டல், டிரான்ஸ்போர்ட்டேஷன் என்ஜினீயரிங் தவிர), கெமிக்கல் என்ஜினீயரிங் (ஆயில், பெயின்ட் டெக்னாலஜி, சர்பேக்டன்ட் டெக்னலாஜி, செராமிக்ஸ் என்ஜினீயரிங் படிப்புகள் தவிர பெட்ரோ கெமிக்கல்ஸ், பாலிமர் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்). எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் (எலெக்ட்ரிக்கல் அண்ட் கம்யூனிக்கேஷன், டெலி கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் தவிர, எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்), இன்ஸ்ட்ருமெண்டேஷன் என்ஜினீயரிங் (எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங், டெலிகம்யூனிக்கேஷன் என்ஜினீயரிங் தவிர, எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.), மெக்கானிக்கல் என்ஜினீயரிங் (ஆட்டோமேஷன், ஆட்டோமொபைல், புரடக்‌ஷன், மானுபாக்ச்சரிங், இன்டஸ்ட்ரியல் என்ஜினீயரிங் தவிர), மெட்டலர்ஜிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் விண்ணப்பதாரர்கள் பிஇ, பிடெக் அல்லது அதற்கு சமமான படிப்புகளை முழு நேர வகுப்பில் சேர்ந்து படித்திருக்க வேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவு மாணவர்கள் குறைந்தது 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் ஏற்கெனவே பட்டம் பெற்றவர்களும் வரும் செப்டம்பரில் படிப்பை முடிப்பவர்களும் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம். எம்டெக் படித்தவர்களும் எம்டெக் படித்து வருபவர்களும் இப்பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம். அதேசமயம், விண்ணப்பதாரர்கள் கேட் (GATE) தேர்வை எழுதியிருக்க வேண்டும். ஒருங்கிணைந்த எம்இ, எம்டெக் படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதில் மெகட்ரானிக்ஸ், ரோபாட்டிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்த மாணவர்கள் இப்பணிகளில் சேர விண்ணப்பிக்க முடியாது.

பொதுப் பிரிவு மாணவர்கள் அதிகபட்சம் 26 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி (கிரீமிலேயர் அல்லாதவர்கள்), தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் விதிமுறைப்படி வயது வரம்பில் விலக்கு உண்டு. விண்ணப்பதாரர்கள் மருத்துவரீதியாக உடல் தகுதி பெற்றிருக்க வேண்டியது அவசியம். கேட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படும். இந்த ஆண்டு நடைபெற்ற கேட் தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே செல்லும். 2012-ஆம் ஆண்டு கேட் தேர்வு மதிப்பெண்கள் செல்லுபடியாகாது. கேட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் குரூப் டிஸ்கஷனுக்கும் நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு நிலையிலும் தகுதி பெற வேண்டியது அவசியம்.

பொதுப் பிரிவு மாணவர்கள், குறைந்தது மூன்று ஆண்டுகள் இந்தப் பணியில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ரூ.2 லட்சத்துக்கான உறுதிப் பத்திரம் எழுதித் தர வேண்டும். ஓபிசி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.35 ஆயிரத்துக்கான உறுதிப் பத்திரம் எழுதித் தேர வேண்டும். இந்தப் பணிகளில் சேருவதற்கான விவரங்கள் ஐஓசி இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் செப்டம்பர் 21-ஆம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு: www.iocl.com

Thanks to Puthiya Thalaimuraikkalvi


_____________________________________________________________________________________________________________________________


ஹைதராபாத்தில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2013-14 கல்வியாண்டில் முதுகலை பட்டய படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவதொரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிப்பவர்கள் 3வருட படிப்பில் உருது பாடம் எடுத்து படித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்பமுள்ளவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்.,4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். குறித்த தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் ரூ.200 அபராத தொகையுடன் சேர்த்து அக்.,25க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு www.manuu.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
தகவல் : www.tntjsw.net

_____________________________________________________________________________________________________________________________


குரூப் 2 பிரிவில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தேர்வுக்கு செப். 5 முதல் விண்ணப்பிக்கலாம்.
வணிகவரித் துறை துணை அலுவலர், சார் பதிவாளர், தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 19 பதவிகளில் காலியாகவுள்ள ஆயிரத்து 64 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வாணைய இணையதளத்திலேயே www.tnpsc.gov.in விண்ணப்பம் செய்யலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்.,4ம் தேதி கடைசி நாளாகும். குரூப் 2 முதல் நிலைக்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது.

குரூப் 2 தேர்வினை எழுத இளநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் கல்லூரிக் கல்வி என்ற நிலைகளில் படிப்பை முடித்திருக்க வேண்டும் என தேர்வு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் : www.tntjsw.net
  
 _____________________________________________________________________________________________________________________________

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

1.1.2014ஐ தகுதி நாளாகக்கொண்டு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களின் சிறப்புச் சுருக்கமுறை திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியல் :

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மனுக்கள் அளிக்கலாம்.1.1.2014 தேதியுடன் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அக்டோபர் 2 மற்றும் 5ஆம் தேதிகளில் கிராமப்புறமாக இருந்தால் கிராம சபை, உள்ளாட்சி மன்றம், நகர்ப்புறமாக இருந்தால் குடியிருப்போர் நலச்சங்கக் கூட்டங்களில், புகைப்பட வாக்காளர் பட்டியலின் உரிய பாகம், பிரிவு ஆகியவை படிக்கப்பட்டு பெயர்கள் சரிபார்க்கப்படும்.

சிறப்பு முகாம்கள் :

அக்டோபர் 6, 20, 27 ஆகிய தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளிக் கட்டிடங்கள் அமைந்துள்ள வாக்குச்சாவடிகள்) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அடுத்த ஆண்டு (2014) ஜனவரி 6ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
சட்டசபை தொகுதிக்குள்ளேயே வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம். சட்டசபை தொகுதிக்கு வெளியே முகவரி மாற்றம் செய்ய வேண்டும் என்றால், பெயர் சேர்ப்பிற்கான புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

புகைப்பட அடையாள அட்டை :

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் புதிய வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன்கூடிய வாக்காளர் அடையாள அட்டை (எபிக் கார்டு) அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் நடைபெறும் தேசிய வாக்காளர் தின கொண்டாட்டத்தின்போது வழங்கப்படும்.

இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தையொட்டி, வாக்குச்சாவடிகளை வரையறை செய்யும் பணி முடிவடைந்துவிட்டது. இதனால், தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை 58 ஆயிரத்து 761ல் இருந்து 60 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது.

இணையதளத்தில் :

சட்டசபை தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகள் விவரம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் (www.elctions.tn.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வது தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு கடந்த ஜூலை மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது.

வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் :

இதுவரை வாக்குச்சாவடி ஏஜெண்டுகளை நியமிக்காத அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் உடனடியாக வாக்குச்சாவடி ஏஜெண்டுகளை நியமிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தம் செய்யும் பணியில் வாக்குச்சாவடி ஏஜெண்டுகள் வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும், தங்களது வாக்குச்சாவடி ஏஜெண்டுகளை நியமித்த பிறகு அவர்களது பெயர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் வெளியிடப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
படிவம் 6 :

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, பெயரை நீக்க படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர் தனது பெயரை சேர்க்க படிவம் 6ஏ-வை பூர்த்தி செய்து தர வேண்டும்.
இணையதளத்தில் விண்ணப்பம் :

அவரவர் வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர், தாசில்தார் அலுவலகம், நகராட்சி அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் படிவம்-6-ஐ வாங்கிக் கொள்ளலாம். தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விண்ணப்பிக்கலாம். _____________________________________________________________________________________________________________________________