அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்.
பெங்களூரில் முதல் முறையாக தவ்ஹீத் ஜமாத் நடத்திய முதல் போராட்டத்திலேயே ஏராளமான ஆண்கள்,பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின் போது ஓரின சேர்க்கைக்கு எதிராகவும் மத்‌திய அரசுக்கு எதிராகவும் இதை ஆதரிக்கும் அறிவு(?) ஜீவிகளுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
பிறகு கன்னடத்தில் கண்டன உரை நிகழ்த்தப்பட்டது இதை தொடர்ந்து உருது மொழியில் கர்நாடக மண்டல மருத்துவ அணி செயலாளர் சகோ.யூஸஃப் நிகழ்த்தினார்.அவர் தனது உரையால் இந்த கேடு கெட்ட செயலை செய்தவர்களின் அழிவு எவ்வாறு இருந்தது என்பதை குர்ஆன் வசனங்களை கூறி தெளிவாக முன் வைத்தார்.
பிறகு பொதுச் செயலாளர் சகோ.ரஹ்மதுல்லாஹ் ஆங்கிலம் மற்றும் தமிழில் தனது கண்டனத்தை எடுத்து எடுத்து வைத்தார் அவர் தனது உரையில் இந்த கேடு கெட்ட செயலை அனுமதித்த ரஷ்யா,போன்ற நாடுகள் அடைந்த அழிவை சுட்டி காட்டி,இது நமது நாட்டின் மிக சிறந்த கலாச்சாரத்தை முறியடிப்பது மட்டுமல்லாமால் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய் பரவி மக்கள் மாண்டு போவார்கள் என்பதை தெளிவு படுத்தினார்.மேலும் மனித உரிமை பேச கூடிய மக்களை நோக்கி,தற்கொலை என்பதும் மனித உரிமை தான் அதற்கு எப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்று தனது கேள்வியை எழுப்பினார்.அல்ஹம்துலில்லாஹ்!!!


ஓரினச்சேர்க்கையாளர்களுடன் வாக்குவாதம்:-
போராட்டம் முடிந்த பிறகு மக்கள் செல்லும் வரை காத்து இருந்த மண்டல நிர்வாகிகளை (பிரஜ ராஜ்ஜிய விபுரே)என்ற ஓரினச்சேர்க்கையாளர் அமைப்பு சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

அவர்கள் போராட்ட களத்திற்க்கு வந்ததன் பின்னணி :-

அவர்கள் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது  ஒரு செய்தியாளர் இன்று உங்களை கண்டித்து ஒரு அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த போகிறது என்று கூறியவுடன் அங்கே இருந்து உடனடியாக நாம் ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்திற்க்கு 7 பேர் கொண்ட அரவாணிகள் நமது நிர்வாகிகளை அணுகி, இந்த தீர்ப்பிற்கு பின்பு இங்கே நடந்த அனைத்து அமைப்பு போராட்டங்களும் இந்த தீர்ப்பை கண்டித்து தான் நடந்தன.உங்கள் அமைப்பு தான் இந்த தீர்ப்பை ஆதரித்து நடத்தியுள்ளது என்று தங்கள் ஆதங்கத்தை  வெளிப்படுத்தியதோடு நமது அமைப்பின் ஆதரவையும் கேட்டனர்..அதற்கு நமது நிர்வாகிகள் இது கேடு கெட்ட செயல் இதற்க்கு உலகத்தில் உள்ள அமைத்து அமைப்பும் ஆதரவு தெரிவித்தாலும் சமூகத்திற்காக போராட கூடிய எங்கள் அமைப்பு ஆதரவு தெரிவிக்காது என்பதை ஆணித்தனமாக எடுத்து வைத்தனர்.இப்படி பிறந்ததற்காக நாங்கள் என்ன தவறு செய்தோம் என்றும் இப்படி பிறந்ததால் எங்களை சமூகம் ஏற்று கொள்ள மறுக்கின்றனர் என்றும் கூறினர்,அதற்கு நமது நிர்வாகிகள் இது ஒரு நோய்,இது போன்று பிறக்கும் போதே எத்தனயோ விதமான நோயுடன் பிறக்கின்றன.அவர்கள் இதற்காக மருத்துவர்களை அணுகி நிவாரணத்தை பெருகின்றனர்  அவ்வாறு நீங்களும் தேவயான சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் என்று விளக்கினர்.முடிவில் இது தொடர்பாக நீண்ட விவாதம் தேவை நாங்கள் முறைப்படி விவாதத்திற்க்கு வருவோம் என்று கூறி சென்றனர்.

இப்படிக்கு,
தவ்ஹீத் ஜமாத்(பெங்களூரு),
அன்சாரி (08197755437)